தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முன்னணி-ஸ்டாலின்

கோவை டைடல் பூங்கா திறப்பு விழாவில் கலந்து கொண்டு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில், முதன் முதலாக தரமணியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். சென்னைக்கு அருகில் உள்ள இந்த தரமணி தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடர்ந்து 10 ஆண்டு காலமாக நல்ல லாபத்தை ஈட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை போன்ற மாநகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தொடங்குவதற்கு முதல்வர் கலைஞர் முடிவு செய்தார்.
இங்கு அமைந்து உள்ள டைடல் பூங்காவை பொறுத்தவரை டிட்கோ, எல்காட், டைடல் பூங்கா, எஸ்.டி.பி.ஐ ஆகியவை ஒன்று சேர்ந்து 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மூலம் ஏறக்குறைய 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் 2 ஆயிரம் தொழில்நுட்ப, சார்பு பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
ஆகவே தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்த வரை இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மாநிலங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கிற போது தமிழ்நாடு முன்னிலை பெற்ற மாநிலமாக விளங்கி வருகிறது. 2001-02-ம் ஆண்டில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை மூலமாக நமக்கு கிடைத்திருக்கிற வருவாய் 10.2 மில்லியன் டாலர் ஆகும். தொடர்ந்து 2008-09-ம் ஆண்டில் 58.7 மில்லியன் டாலராக மாறியது. 2010-ம் ஆண்டில் இதன் வருவாய் 73.1 மில்லியன் டாலராக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆகவே தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரை 2009-10-ம் ஆண்டில் 8 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் வர்த்தகத்தை செய்து இன்றைக்கு நாம் ஒரு உன்னதமான இடத்தை பெற்றுள்ளோம்.
இன்னும் 2 ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ்நாட்டின் பங்கு 25 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது. அதற்கான முயற்சியில் கலைஞர் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் ஸ்டாலின்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications