இளம் பெண், காதலருடன் ஓட்டம்-தப்பிக்க உதவியதாக 10 பேர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இளம்பெண்ணைக் கடத்திச் சென்ற வழக்கில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மகள் கலைச்செல்வியை அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் காதலித்துள்ளார். இதையறிந்த கலைச்செல்வியின் தந்தை வேறு ஒருவருடன் நிச்சயதார்த்ததுக்கு ஏற்பாடு செய்தார்.
இதையறிந்த மகேஷ் கடந்த 15ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்று கலைச்செல்வியை கடத்தியுள்ளார். இதுகுறித்து வடமதுரை காவல்நிலையத்தில் சின்னராஜ் புகார் கொடுத்துள்ளார்.
புகாரை ஏற்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்போது தலைமறைவான மகேஷ் மற்றும் கலைச்செல்வியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications