புனேவில் நண்பர்கள் தினம் கொண்டாடிய 489 மானேஜ்மென்ட் மாணவர்கள் போலீசில் சிக்கினர்
புனே: பண்ணை இல்லத்தில் மது விருந்துடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடிய எம்.பி.ஏ மாணவர்கள் 489 பேரை போலீஸார் பிடித்தனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று புனேவில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெயுர் பண்ணை வீடு ஒன்றில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கிருந்த 489 மாணவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிம்பயாசிஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மானேஜ்மென்ட் ஸ்டடீஸில் படிப்பவர்கள்.
81 மாணவர்களும், 7 நிகழ்ச்சி அமைப்பாளர்களும் அனுமதி இன்றி மது அருந்தியதற்காகவும், சத்தமாக இசையை ஒலிக்க செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நேற்று ஜாமீனில் வெளிவந்தனர்.
இது குறித்து டி. எஸ். பி. பிரவின் சிங் பர்தேஷி கூறியதாவது,
புனே-சோலாபூர் சாலையில் புனே நகைக்கடை குடும்பத்திற்கு சொந்தமான சிந்து என்னும் பண்ணை வீட்டில் 22 முதல் 28 வயது வரை உள்ள மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு்ம், நண்பர்கள் தினத்திற்கும் சேர்த்து விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு 8.30 மணி அளவில் 10 பேருந்துகளில் அந்த பண்ணை வீட்டுக்கு மாணவர்கள் வந்தனர். இசையின் சத்தம் தாங்க டியாமல் அந்த பகுதியில் வசிப்பவர்கள் 11 மணி அளவில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனாலும், அங்குள்ளவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
போலீசார் வந்து கேட்டதற்கு உரிய அனுமதி வாங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை அனுகிய போது, அனுமதி பெறாத செய்தி தெரிய வந்தது. அங்கிருந்த 489 மாணவர்களில் 235 மாணவிகளும் அடக்கம். பண்ணை வீட்டில் இருந்து 302 பாட்டில்கள் மதுவும், பீரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் குறித்து சிம்பயாசிஸ் சொசைட்டியின் தலைவர் வித்யா ஏராவத்கர் கூறியதாவது,
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அங்கிருந்தவர்களில் 350 பேர் எங்கள் கல்வி நிறுவன விடுதியில் தங்கி இருப்பவர்கள் தான். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 7 பேர் கொண்ட மருத்துவக் குழு மாணவர்களை பரிசோதனை செய்தது.
மாணவர்களைத் தாக்கிய பஜ்ரங் தளத்தினர்
இதற்கிடையே, சட்டிஸ்கர் மாநிலம் ராஞ்சியில் நண்பர்கள் தினம் கொண்டாடியவர்கள் மீது பஜ்ரங்தளம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.
அங்கு உள்ள ஒரு பூங்கா மற்றும் ஓட்டலில் ஏராளமான மாணவிகள் கூடி நண்பர்கள் தினத்தை உற்சாகமாக கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது பஜ்ரங்தளம் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு புகுந்து மாணவிகளை அடித்து உதைத்தனர். பல மாணவிகளை தரதரவென தரையில் இழுத்து வந்தனர். அடி தாங்காமல் பல மாணவிகள் கதறி அழுதனர். ஆனாலும் கடுமையாக தாக்கினார்கள்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்டு போலீசார் அங்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் கைது செய்யவில்லை. வந்து வேடிக்கை பார்த்து விட்டுப் போய் விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications