காமன்வெல்த் ஊழல் எதிரொலி-ஒருங்கிணைப்புக் குழு பொருளாளர் ராஜினாமா
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக வெளியாகி வரும் பரபரப்பின் பின்னணியில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொருளாளர் அனில் கண்ணா அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிக் குழு மீதான நிதி மோசடிப் புகார்கள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இதுதொடர்பாக எந்தவிதமான விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்கத் தயார் என போட்டிக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி கூறியுள்ளார்.
இந்த நிலையில், போட்டிக் குழுவின் பொருளாளர் பொறுப்பிலிருந்து அனில் கண்ணா விலகியுள்ளார். அவரது மகனின் நிறுவனத்திற்கு டென்னிஸ் ஸ்டேடியத்தில் செயற்கைப் புல் தரை (synthetic) கோர்ட்களை அமைக்கும் கான்டிராக்ட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த பதவி விலகல்.
இந்திய டென்னிஸ் சம்மேளன செயலாளராக இருப்பவர் அனில் என்பது குறிப்பிடத்தக்கது. புகார்களைத் தொடர்ந்து தார்மீக அடிப்படையில் தனது பதவியை கண்ணா ராஜினாமா செய்துள்ளதாக போட்டிக் குழு தெரிவித்துள்ளது.
கண்ணாவின் மகன் ஆதித்யா பணியாற்றி வரும் ரிபவுன்ட் ஏஸ் என்ற நிறுவனத்திடம், ஆர்.கே.கண்ணா டென்னிஸ் ஸ்டேடியத்தில் 14 செயற்கைப் புல்தரை கோர்ட்களை அமைக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார் ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் அமைத்த செயற்கைப் புல்தரை, மிகவும் மோசமாக இருப்பதாகவும், கீழே விழுந்தால் பலத்த அடிபடும் என்றும் டென்னிஸ் வீரர்களும், வீராங்கனைகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
உண்மையில் இந்த நிறுவனத்தின் செயற்கைப் புல்தரையை ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நிர்வாகிகள் ஏற்கனவே நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட மோசமான புல்தரையை இங்கு கொண்டு வந்து போட்டுள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பி விட்டது.
தொடர்ந்து காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக குவிந்து வரும் புகார்களால் போட்டியின் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் வேகமாக தளர்ந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications