ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கனுக்கு ரூ.14 லட்சம் செலவில் சிலைகள்
நெல்லை: ராதாபுரம் பஸ் நிலையத்தில் ரூ. 14 லட்சம் செலவில் காமராஜர் மற்றும் கக்கனுக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்படும் என சிலை அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.
ராதாபுரம் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயகுமார், சிவாஜி முத்துகுமார், சிவாஜி பாலசந்தர் ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தியாகி சுடலைமுத்து தலைமையில் நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா ஏற்கனவே அந்த இடத்தை பார்வையிட்டு சென்றுள்ளார்.
ராதாபுரம் தொகுதி அமைய காமராஜரே காரணமாக இருந்தார். குமரி மாவட்டத்தில் இருந்து பேச்சிபாறை அணைத் தண்ணீர் ராதாபுரத்திற்கு வரவும், அவர் உதவி செய்தார். எனவே அவருக்கு அங்கு சிலை அமைக்கப்பட வேண்டும்.
விரைவில் அங்கு ரூ. 14 லட்சம் செலவில் காமராஜர், கக்கன் வெண்கல சிலைகள் அமைக்கப்படும். சிலைகள் அமைப்பதற்கான நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications