நிலத்தகராறில் இரட்டை கொலை: தந்தை, மகனை பிடிக்க தனிப்படை
கயத்தார்: நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மைத்துனரையும், அவரது 2-வது மனைவியையும் வெட்டிக் கொன்ற தந்தை, மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே பரம்புகோட்டையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பூவய்யா. மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே லூர்து என்பவருடன் வேலைக்கு சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கணவனை இழந்த லூர்து பூவய்யாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். லூர்து அக்கா ஜோதி குடும்பத்துக்கும், பூவய்யாவுக்கும் நிலத் தகராறு இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜோதியின் மகன் விஜியும், பூவய்யாவும் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் இருவரும் சமரசமாக சென்று விடலாம் என ஜோதியின் கணவர் சிதம்பரம் கூறியுள்ளார். இதை ஏற்காத பூவய்யா தன்னுடைய உறவினர்களிடம் விஜி மற்றும் சிதம்பரத்தை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் பூவய்யாவை கொல்ல திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வீட்டு முன்பு பூவய்யாவும், லூர்தும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிதம்பரம், ஜோதி, விஜி மூவரும் அவர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் மூவரும் அரிவாளால் பூவய்யாவை வெட்டினர். இதை தடுத்த லூர்துவுக்கும் வெட்டு விழுந்தது.
இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தனர். இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படை அமைத்து சிதம்பரம், ஜோதி, விஜியை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications