செந்தூர் எக்ஸ்பிரஸ்-தினமும் இயக்க மம்தாவிடம் அழகிரி கோரிக்கை
டெல்லி: வாரம் ஒரு நாள் மட்டுமே இயங்கும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கோரிக்கை விடுத்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் மற்றும் தென் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து அழகிரி கோரிக்கை விடுத்தார்.
அதே போல திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் தூத்துக்குடி-மைசூர் மற்றும் நாகர்கோவில்-கோவை ஆகிய 2 விரைவு ரயில்கள் நின்று செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மம்தா பானர்ஜி உறுதியளி்த்தார்.
லோக்சபாவில் மு.க.அழகிரி 'கன்னி' பேச்சு:
இந் நிலையில் மு.க.அழகிரி முதல் முறையாக நேற்று லோக்சபாவில் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் பேச முடியும் என விதிகள் உள்ளன. இதனால் மு.க.அழகிரியால் லோக்சபாவில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்குப் போவதையே தவிர்த்து வந்தார். இது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து புதிய தீர்வு ஒன்றை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முன்வைத்தார். அதன்படி பிரதான கேள்விகளுக்கு பதில்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு அதை அழகிரி வாசிக்கலாம். துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. நேற்று லோக்சபாவில் மு.க.அழகிரி முதல் முறையாக பேசினார். அந்த வகையில் இது கன்னிப் பேச்சாக அவருக்கு அமைந்தது.
நேற்றைய கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்விக்கு அழகிரியை பதிலளிக்க அழைத்தார் மீரா குமார். உடனடியாக எழுந்த அழகிரி, கேள்வி எண் 161க்கான பதில் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அதன் பின்னர் அது தொடர்பான துணைக் கேள்விகளுக்கு அழகிரியிடம் அனுமதி பெற்று ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளித்தார்.
தொடர்ந்து பல்வேறு பிரதான கேள்விகளுக்கும் அழகிரி பதிலளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications