பேய் பீதியில் தருமபுரி கிராமங்கள்: வீடுகளில் நாமம் போடும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பேய் உலாவுவதாக பரவிய தகவலையடுத்து பெரும்பாலான வீடுகளில் நாமம் போடப்பட்டுள்ளது.

பேய் இருக்கிறதோ, இல்லையோ யாராவது இந்த பகுதியில் பேய் நடமாடுகிறது என்று வதந்தியை கிளப்பி விடுவதுண்டு. இந்த வதந்தி காட்டுத்தீ போல ஊரெல்லாம் பரவும். அதிலும் கிராமங்களைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை.

தர்மபுரியை அடுத்த கம்பைநல்லூர் பகுதி கிராமங்களில் பேய்கள் உலாவுவதாக தகவல் பரவியது. இதனையடுத்து, அந்த கிராம மக்கள் நள்ளிரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தி தெருக்களில் உலா வந்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி கிராமத்தில் பேய் உலாவுவதாக வதந்தி பரவியது.

இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் பேய் மற்றும் காத்து கருப்பு அண்டாமல் இருக்க வீட்டில் உள்ள கதவு, மரம், ஜன்னல் போன்றவற்றில் நாமம் வரைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் இந்த பீதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+