'உள்நாட்டு நிறுவனங்களுக்கு மின் வெட்டு, அயல் நாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரமா?'
மதுரை: தமிழ்நாடு மின்சார வாரியம் உள்நாட்டு வணிகர்களுக்கும், சுய தொழில் புரிவோருக்கும் மின்வெட்டை அமல்படுத்துகிறது. ஆனால், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் மீது வணிகர் சங்க பேரவைத் தலைவர் தா. வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அதன் தலைவர் தா.வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறு மற்றும் குறுந்தொழில் செய்வோர் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளனர். இவர்களில் மாதம் 750 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வேதனை தருவதாக உள்ளது.
வணிகப் பயன்பாட்டுக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வணிகர்கள் அரசை வலியுறுத்தி வரும் வேளையில் இந்த மின் உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே உயர்ந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை மின் கட்டண உயர்வால் மேலும் உயர வாய்ப்பு ஏற்படும்.
எனவே, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் உள்நாட்டு வணிகர்களுக்கும், சுய தொழில் புரிவோருக்கும் மின்வெட்டை அமல்படுத்துகிறது. ஆனால், பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகின்றது.
அவர்களுக்கு ஒரு யூனிட்க்கு ரூ. 1 வீதம் உயர்த்தினாலே தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications