For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி தலைமையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம்-குஷ்பு பங்கேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் கருணாநிதி இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், திமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடையே எப்படிப் பிரசாரம் செய்வது, எடுத்துக் கூறுவது, ஜெயலலிதா தொடர்ந்து அடுக்கி வரும் புகார்களுக்கு எப்படி பதிலளிப்பது என்பது உள்ளிட்டவை குறித்து திமுக சொற்பொழிவாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் ராஜா, கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகை குஷ்பு, இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட திமுக சொற்பொழிவாளர்களும் இதில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X