ஹஜ் பயணிகளுக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே பாஸ்போர்ட் வழங்கும் திட்டம்
சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.
பாஸ்போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து, விண்ணப்பித்த நபர் சரியான முகவரியில்தான் இருக்கிறார், தகவல்கள் சரியாக உள்ளன என்பதை தெரிவிக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
அப்படி சான்றிதழ் கிடைத்த பின்னர்தான் சம்பநத்ப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஹஜ் யாத்திரை வருவோர் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, துரித கதியில் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடிய சர்வதேச பாஸ்போர்ட்டை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும். இது தற்காலிக பாஸ்போர்ட்தான். அதேசமயம், இதை நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.
இதுதொடர்பாக அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.
தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய புதிய திட்டத்தின்படி சென்னையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். தவ்லத் தமீம் அறிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications