சாத்தூர் பட்டாசு குடோனி்ல் வெடி விபத்து: 2 போலீஸார் படுகாயம்
சாத்தூர்: சாத்தூரில் பட்டாசு குடோனில் போலீசாரும் வருவாய்த்துறையினரும் ரெய்ட் நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உடல் கருகி பலத்த காயமடைந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக, இரவு-பகலாக நடந்து வருகிறது.
பல இடங்களில் லைசென்சு பெறாமல் குடோன்கள், வீடுகளிலேயே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து புகார்கள் குவிந்து வருவதால் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சாத்தூர், வெம்பக்கோட்டை, துரைசாமிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களில் சோதனை நடந்தது.
துரைசாமிபுரத்தில் உள்ள ராமசுப்பு என்பவருக்கு சொந்தமான குடோனில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் ரெய்ட் நடத்திக் கொண்டிருந்தபோது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் லத்தீப், சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீஸார் கணேசன், ஆசைக்கனி, வருவாய் ஆய்வாளர்கள் ராஜமோகன், சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அப்துல் லத்தீப், ரமேஷ் ஆகியோர் உடல் கருகிவிட்டது. இருவரும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் மற்றவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications