கோவில்பட்டி: லாரியுடன் மோதல்-கார் எரிந்து 8 பேர் உடல் கருகி பலி
தூத்துக்குடியில் இருந்து ஒரு லாரி ஜிப்சம் ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம் துலுக்கர்பட்டியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு இன்று அதிகாலை சென்றது. லாரியை நெய்வேலியை சேர்ந்தகுமார் ஓட்டிச் சென்றார்.
கோவில்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது லாரியின் பின் பக்க டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து லாரியை டிரைவர் ரோட்டோரமாக நிறுத்தினார்.
அப்போது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது.லாரியின் டீசல் டேங்க் மீது கார் மோதியதால், அது வெடித்துச் சிதறி காரும் லாரியும் தீப்பற்றி எரிந்தன.
இதில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்பட 8 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். லாரியின் டிரைவரும், கிளீனரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதற்குள் காரும் லாரியும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகி விட்டன.
காரில் இருந்த 8 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் மீட்டனர். உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலுமாக உருக்குலைந்துவிட்டன.
இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications