லோக்சபாவில் செயல்படுவது எப்படி?அழகிரி தலைமையில் திமுக ஆலோசனை!

மு.க.அழகிரி தலைமையில் திமுக எம்.பிக்கள் டெல்லியில் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கூட்டம் அழகிரி வீட்டில் வைத்து நடந்துள்ளது. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவராக தற்போது டி.ஆர்.பாலு செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழகிரி வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா திமுக எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
டி.ஆர். பாலு, அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன், நெப்போலியன் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் உள்ள திமுக உறுப்பினர்கள் கேள்வி நேரம் மட்டுமின்றி, பிற சமயங்களிலும் தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், பிற கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளில் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும், திமுக கொள்கைகளுக்கு உட்பட்டும் பங்கேற்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிவடைந்ததும், டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறபோது, திமுகவைச் சேர்ந்த இரு அவை உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி கேள்வி எழுப்புவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கேள்வி நேரத்தின் போது தமிழகத்துக்கு வேண்டிய திட்டங்களை எவ்வாறு பெற வேண்டி பேச வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications