அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் திமுக எம்எல்ஏ என்னை தாக்கினார்: உடற்கல்வி இயக்குனர்
நெல்லை: நெல்லை அண்ணா பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் தன்னை திமுக எம்.எல்.ஏ. மாலைராஜா தாக்கியதாக பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் தேவதாஸ் தெரிவித்தார்.
இவரை மட்டுமல்லாமல், பல்கலைக்கழக துணைவேந்தரையும் திமுக எம்.எல்.ஏ தாக்கியதாக சர்ச்சை பெரிதாகியுள்ளது.
இந்த நிலையில் தேவதாஸ் நேற்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 7ம் தேதி பல்கலை கழகத்தில் நடந்த முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் மாலை 3.55 மணிக்கு வந்தனர். ஆனால் நெல்லை தொகுதி எம்எல்ஏவும், சிண்டிகேட் உறுப்பினருமான மாலைராஜா எம்எல்ஏ தாமதமாக மாலை 4.10க்கு வந்தார். ஊழியர்கள் அவருக்கு பட்டமளிப்பு அங்கியை வழங்கினர். ஆனால் அவர் அதை கோபத்தில் தூக்கி எறிந்து விட்டார்.
விழா முடிந்த பிறகு மாலைராஜா எம்எல்ஏ உள்பட 4 பேர் உருட்டுகட்டையுடன் துணைவேந்தர் அறைக்குள் அத்துமீறி நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்க முயன்றனர். இதை நான் தடுத்தபோது என்னை தாக்கினர். பின்னர் என்னை பிடித்து தள்ளயதில் ஏசி இயந்திரம் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அபாஸ்குமார்சிங் மற்றும் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசில் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications