காமன்வெல்த் தடகளம்: இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது: மில்கா சிங்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ள விவரங்கள் வெளியாகி நாட்டையே அதிர வைத்துள்ள நிலையில் மில்கா சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம், பாக்சிங், டென்னிஸ், வில்வித்தை, டென்னிஸ், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், பேட்மின்டன் போன்ற விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதி.
அதே நேரத்தில் தடகளத்தில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை.
இந்தியாவில் சிறந்த தடகள வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைப்பதில்லை. தடகள அணியின் பயிற்சியை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன்.
ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது. காமன்வெல்த் போட்டி முடிந்தவுடன் எனது கருத்துக்கு வரவேற்பு கிடைக்கும்.
மும்பை தாக்குதலையடுத்து பாதுகாப்பு காரணங்களை கூறி பல நாடுகள் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகிவிட்டன. பங்கேற்கும் நாடுகளின் நட்சத்திர வீரர்கள் பலர் விலகி வருகின்றனர். இந் நிலையில், காமன்வெல்த் போட்டி ஊழல் புகாரால் இந்தியாவின் கெளரவம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் மில்கா.
1958ம் ஆண்டு கார்டிப்பி்ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 47.6 வினாடிகளில் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர் மில்கா சிங். அவருக்கு இப்போது வயது 81 என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications