'இந்தி': நாடாளுமன்றத்தில் திமுக-பாஜக மோதல், அவை ஒத்திவைப்பு

இதையடுத்து திமுக-பாஜக இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை கேள்வி நேரத்தின்போது மின்துறை இணையமைச்சர் பரத்சிங் சோலங்கி இந்தியில் பதிலளித்தார்.
ஆனால், இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படவில்லை. ஆங்கிலம் அல்லது இந்தியில் உறுப்பினர்கள் பேசும்போது அது இந்தி, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும். இதை ஹெட்-செட்களி்ல் உறுப்பினர்கள் கேட்டு அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆனால், சோலங்கி இந்தியில் பேச அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. இது குறித்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரச்சனை கிளப்பினார்.
மொழி பெயர்ப்பு செய்யப்படாததை கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாகக் கூறிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சோலங்கி, நான் ஆங்கிலத்திலேயே பதிலளி்ககிறேன் என்றார்.
ஆங்கிலத்துக்கு பாஜக எதிர்ப்பு:
ஆனால், இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமைச்சர் இந்தியில் தான் பதிலளிக்க என்றனர்.
கேள்வியை பாஜக உறுப்பினர் இந்தியில்தான் கேட்டுள்ளார். எனவே இந்தியில்தான் பதிலளிக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து திமுக-பாஜக எம்பிக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
பின்னர் அவை கூடியதும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தடங்கல்களுக்காக மீரா குமார் வருத்தம் தெரிவித்தார். சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் காரணமாகவே இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் தற்போது அது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் மீரா குமார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications