தாலுகா அலுவலத்தில் குடியேற முயன்ற குடியாத்தம் எம்.எல்.ஏ. லதா கைது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வீட்டுமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் தாலுகா அலுவலத்தில் குடியேற முயன்ற குடியாத்தம் எம்.எல்.ஏ. லதா உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டுமனை பட்டா கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வேலூர் தாலுகா அலுவலம் முன்பு குடியேறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தை கைவிடக் கோரி, அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து விறகு, அடுப்பு, பாயுடன் எம்.எல்.ஏ. லதா உட்பட 300 பேர் தாக்கா அலுவலகத்திற்குள் குடியேறும் போராட்டம் நடத்தி உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications