கரூர் யூனியன் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி உண்ணாவிரதம்
கரூர்: கரூர் யூனியன் தலைவர் வளர்மதியை பதவி நீக்கம் செய்யக் கோரி, துணைத் தலைவர் உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூர் யூனியன் தலைவர் வளர்மதி மீது திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, அதை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைவர் வளர்மதி மீது கவுன்சிலர்கள் கொடுத்த புகார் மீது விசாரணையின் உண்மைத் தன்மை குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், கடந்த தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள், தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தால், அது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான காலக்கெடு குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும் என்றும், யூனியன் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக, அலுவலக வளாகம் எதிரே இன்று மூன்றாவது முறையாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த விவகாரத்தில் ஊழல் தலைவர் வளர்மதியை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி காப்பாற்றி வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. ஆனால் இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications