ராகுல் மகாஜனுக்கு திடீர் நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி

அவரை சாய்பீ மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் அவரை அங்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ராகுலுக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராகுலின் குடும்ப டாக்டரான சச்சின் பத்கர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே ராகுலுக்கு உடல் நலம் சரியில்லை. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தீர்மானித்தோம்.
கடந்த 2 நாட்களாக அவர் அப்செட் ஆக இருந்தார். சரியாக யாருடனும் பேசவும் இல்லை. இதனால்தான் அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.
சில நாட்களுக்கு முன்புதான் ராகுல் தன்னை கடுமையாக அடித்தாக சுயம்வரம் மூலம் அவர் தேடிக் கொண்ட மனைவி டிம்பி குற்றம் சாட்டி வீட்டை வெளியேறி பின்னர் திரும்பி வந்தார். இந்த சர்ச்சை ஓய்ந்த சில நாட்களில் ஒரு ஆபாச இணையதளத்தில், டிம்பி நீச்சல் உடையில் படு கவர்ச்சிகரமாக இன்னொருவருடன் இருந்த நெருக்கமான படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications