64வது சுதந்திர தினம்-ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் 63வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

மகிழ்ச்சிகரமான சுதந்திரதினத்தில் அனைவருக்கும் எனது நல்வாழ்த் துக்களையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தால் நமது நாடு விடுதலை பெற்றதை சுதந்திர தினம் நினைவூட்டுகிறது. சுதந்திரத்தை காப்பது நமது கடமை.

சரித்திர சிறப்புமிக்க இந்த நன்நாளில் ஒற்றுமை, அமைதி, இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அனைவரும் இணைந்து கை கொடுப்போம். நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத் துக்கும் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். சுய தேவையை பூர்த்தி செய்யும், முழு நம்பிக்கையுடன் உறுதி யான இந்தியாவை கட்டி எழுப்ப உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்..

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள செய்தியில்,

இந்தியத் திருநாட்டின் முந்தைய வரலாற்றுத் திருப்பு முனை அத்தியாயங்கள் அனைத்துலகிலும் போற்றப்படுபவை. தற்போது சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் ஏராளம்.

நாட்டிலுள்ள ஏழை எளிய, நடுத்தர, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையோரின் நலன் களை மேம்படுத்த முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்கள் நல அரசின் அம்மகத்தான ஆட்சி நடை பெற்று வரும் இந்நன்னாளில் கொண்டாடப்படும் சுதந்திரத் திருவிழாவான இன்று விடுதலைக்காக உடல், பொருள், உயிர் அனைத்தும் ஈந்த தியாக மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் விடுத்துள்ள செய்தியில்,

செந்நீரும், கண்ணீரும் சிந்தி பெற்ற சுதந்திரம் இன்றும் வரலாற்றில் மறுக்க முடியாதது, மறைக்க முடியாதது. அத்தகைய சுதந்திரத்தைப் பெற தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள், இந்த சுதந்திர தின திருநாளாகும்.

இன்று சுதந்திர திருநாளை கொண்டாட குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து கொண்டாட வேண்டி இருப்பதும், பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், காவலர்களும் பாதுகாப்பு அளிக்கும் நிலையில்தான் ஆட்சித் தலைவர்கள் சுதந்திர திரு நாளை கொண்டாட வேண்டி இருப்பதும் நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கவையாகும் என்று தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்தில்,

இந்திய திருநாட்டின் 64-ம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மகிழ்ச்சியான இத்தருணத்தில் பொருளாதாரப் பின்னடைவு, தீவிரவாதி களின் அச்சுறுத்தல், மின் உற்பத்தி பாதிப்பு, பண வீக்கம், விலைவாசி உயர்வு என பல்வேறு அச்சுறுத்தல் களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல்வேறு சவால் களை சந்திக்கவேண்டிய இத் தருணத்தில் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தேசத்தின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒருங்கிணைந்து உழைக்க உறுதி ஏற்போம்.

தேசத்தின் சுதந்திரத்திற் காக பாடுபட்டு தங்கள் இன்னுயிர்களை இழந்த தியாகச்செம்மல்களை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து போற்றுவோம். இந்தியாவின் வருங்காலம் மகிழ்ச்சியாகவும், சுபிட்சமாகவும் விளங்க வேண்டி அனைவரையும் வாழ்த்துகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+