கட்டி வைக்காவிட்டால் கொழுந்தியாள் முகத்தில் ஆசிட் வீசுவேன்-ஏட்டு அடாவடி!
நெல்லை: கொழுந்தியாளை திருமணம் செய்து வைக்காவிட்டால் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன் என்று மிரட்டிய நெல்லை ஏட்டு மீது அவரது மாமனார் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
நெல்லை கண்ட்ரோல் ரூமில் ஏட்டாக பணியாற்றுபவர் சுந்தரம். இவரது மனைவி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் வண்ணார்பேட்டையில் உள்ள மாமனார் வீ்ட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் சுந்தரம் 2வது திருமணம் செய்ய முடிவெடுத்தார். வேறு இடத்தில் மணம் முடித்தால் குழந்தைகளை கவனிப்பதில் பிரச்சனை ஏற்படும் என கருதிய சுந்தரம் மனைவியின் தங்கையை திருமணம் செய்து தருமாறு மாமனாரிடம் கேட்டார்.
ஆனால் அவர் முடியாது என்று கூறி விட்டாராம். எப்படியாவது கொழுந்தியாளை திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சுந்தரத்திற்கு மாமனாரின் பதில் அதிர்ச்சியை தந்தது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவிக்கு சொந்தமான நகைகளை தருமாறு கேட்டார். மாமனார் 20 பவுன் நகை கொடுத்தார். ஆனால் சுந்தரம் மேலும் 15 பவுன் நகை வேண்டுமென்றார். தனது குழந்தைகளையும் அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்.
தனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற ஆத்திரத்தில் கொழுந்தியாள் முகத்தில் ஆசி்ட் ஊற்றுவேன் எனவும் மிரட்டினார். இதுகுறித்து சுந்தரத்தின் மாமனார் மாநகர கமிஷனர் அபாய்குமார்சிங்கிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து இதுகுறித்து கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் பாளை இன்ஸ்பெக்டர் குருநாதன், எஸ்ஐ பழனி முருகன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications