தாயுடன் வந்த நர்சிங் கல்லூரி மாணவி மாயம்!
நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தாயுடன் வந்த நர்சிங் கல்லூரி மாணவி மாயமாகிவிட்டார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தை சேர்ந்த கருப்பசாமி மகள் சுமதி. இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது தாயார் அழகம்மாள் கடந்த 9ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து சுமதியை அழைத்து கொண்டு தேவர்குளம் செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையம் வந்தார்.
அங்குள்ள ஒரு கடையில் அழகம்மாள் பழங்கள் வாங்கி கொண்டிருந்தபோது சுமதி திடீரென மாயமாகிவிட்டார்.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மகளை பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுமதியின் அண்ணன் பாலகிருஷ்ணன் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், எஸ்ஐ சகாயமூர்த்தி, ஆகியோர் விசாரணை நடத்தி சுமதியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications