ஆக. 22ல் திருவனந்தபுரத்தில் சுனந்தாவை மணக்கிறார் தரூர்

Subscribe to Oneindia Tamil

Sunanda Pushkar and Shashi Tharoor
டெல்லி: கேரளாவில் உள்ள தங்களது 200 ஆண்டு கால பூர்வீக வீட்டில் காதலி சுனந்தா புஷ்கரை ஆகஸ்ட் 22ம் தேதி எளிமையான முறையில் மணக்கவுள்ளார் சசி தரூர்.

இவர்களது திருமணம் குறித்து முன்பு அரசல் புரசலாக செய்தி வந்தது. தற்போது உறுதியாகியுள்ளது. சுனந்தாவை தான் மணக்கவிருக்கும் செய்தியை எளிமையான முறையில் கடிதம் மூலம் நெருக்கமான நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார் சசி தரூர். அதில், திருவனந்தபுரத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான 200 ஆண்டு கால பழமையான பாரம்பரிய இல்லத்தில் ஆகஸ்ட் 22ம் தேதி எளிய முறையில் திருமணம் நடக்கிறது.

23ம் தேதி தனது திருவனந்தபுரம் தொகுதியில் எளிமையான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செப்டம்பர் 3ம் தேதி இறுதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தரூர் தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே இதைத் தெரிவித்துள்ளதாகவும், பகிரங்கமாக இதை தெரியப்படுத்த விரும்பவில்லை என்றும் தரூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணப் பத்திரிக்கையை திருடி விட்டனர்-தரூர் புலம்பல்

இதற்கிடையே தனது திருமண அழைப்பை டிவி மீடியாக்கள் திருடி வெளியிட்டு விட்டதாக கடுப்பாக கூறியுள்ளார் தரூர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது திருமண பத்திரிகையை உறவினர்கள் கூட பெறுவதற்கு முன் அதைத் திருடி டிவி சேனல்கள் ஒளிபரப்பியுள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. குறைந்தபட்ச நாகரிகம் கூட நமது ஊடகங்களுக்கு கிடையாதா என்று கேட்டுள்ளார் தரூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+