பீகார் முழுவதும் வறட்சி பாதித்துள்ளது-நிதீஷ்குமார் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Nitish Kumar
பாட்னா: ஒட்டுமொத்த பீகாரும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

பாட்னாவில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் பீகார் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

2007, 08ல் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வறட்சியால் பீகார் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் ஒட்டுமொத்த பீகாரும் வறட்சியில் சிக்கியுள்ளது.

இயற்கைச் சீற்றத்தால் தொடர்ந்து பீகார் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிற போதிலும், மாநிலம் வளர்ச்சிப் பாதையில்தான் செல்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை அளிக்க பீகார் அரசு கடுமையாக பாடுபட்டு வருகிறது.

பீகாரில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பீகார் அரசு அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+