இளம்பெண்ணை கற்பழித்து தலைமறைவானவருக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே காதலித்து, கற்பழித்து விட்டு தலைமறைவான காதலரை கண்டுபிடிக்கக் கோரி தனது தாயாருடன் இளம் பெண் போராட்டத்தில் குதித்துள்ளார்.

பள்ளியாடி அருகே உள்ள கப்பியறை வயக்கரை என்ற இடத்தைச் சேர்ந்தவர் அகிலா (21). முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. 2 பேரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அகிலா, அருள்ராஜை வற்புறுத்தினார். ஆனால் குடும்பத்தினருக்கு பயந்து அருள்ராஜ் திருமணத்துக்கு மறுத்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலன் வீட்டுக்கு அதிரடியாக சென்ற அகிலா, தனக்கும், அருள்ராஜூக்கும் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் குடும்பத்தினர் அகிலாவை தாக்கி விரட்டியுள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர். ஆனால் அகிலா, வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது தாயாரும் போராட்டத்தில் பங்கேற்றார்.

இன்று 4-வது நாளாக அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. காதலன் வீட்டில் அகிலா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கருங்கல் காவல் நிலைய போலீசார் அகிலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடம் அகிலா ஒரு புகார் கொடுத்தார். அதில்,

சம்பவத்தன்று இரவு வீட்டில் நான் தனியாக இருந்தேன். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து அருள்ராஜ் வீட்டுக்குள் நுழைந்தார்.

கத்தியை காட்டி மிரட்டி என்னை கற்பழித்தார். அதை செல்போனிலும் படம் பிடித்தார். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த ஆபாச படத்தை காட்டியே என்னை பலமுறை அவர் கற்பழித்தார்.

இதனால் அவரையே திருமணம் செய்ய நான் முடிவு செய்தேன். அவரது வீட்டுக்கு சென்றபோது அவரும், குடும்பத்தினரும் என்னை அடித்து விரட்டினர். இப்போது அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர்.

போலீசார் அருள்ராஜூடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே இடத்தில் உயிர் விடுவேன என்று கூறியுள்ளார்.

போலீஸார் அருள்ராஜையும், அவரது குடும்பத்தினரையும் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+