பாளை மத்திய சிறைக்குள் கஞ்சா, செல்போன் வீச்சு-பரபரப்பு
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் பைக்கில் வந்த இருவர் கஞ்சா பொட்டலம், செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகியவற்றை 5 பாலீதின் கவர்களில் அடைத்து வீசிச் சென்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1400 பேர் உள்ளனர். இங்கு சிறை கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 300 சிறை காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைக்குள் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று பைக்கில் வந்த இருவர் சாலையோரம் நின்றவாறே திடீரென 5 பாலீதின் பைகளை வெளிச்சிறைக்குள் வீசினர். இதை பார்த்த சிறைக் காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். உடனே காவலர்கள் வெளிசிறைக்குள் சென்று பாலீதின் பைகள் விழுந்த பகுதியைப் பார்த்தனர். ஆனால் அதற்குள் அவற்றை யாரோ பதுக்கி விட்டனர். இது தொடர்பாக இரு கைதிகளை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இதில் 1 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் ஆகியவை சிறை கம்பவுண்டுக்குள் விழுந்ததாகவும், அதை கும்பலாக வந்த 10 கைதிகள் எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதி்ர்ச்சி அடைந்த காவலர்கள் சம்பந்தப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் கஞ்சா மற்றும் செல்போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவத்தால் நேற்று சிறை வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications