கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள 350 ஈழத் தமிழர்கள்-அகதி அந்தஸ்து வழங்க இலங்கை அரசு எதிர்ப்பு
டொரண்டோ: கப்பல் மூலமாக கனடாவைச் சென்றடைந்துள்ள 350 ஈழத் தமிழர்கள் அகதி அந்தஸ்து கோரி புகலிம் அடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு கனடா அரசு அகதிகள் அந்தஸ்தை அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசு தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
“சன் சீ" என்ற கப்பலில் 350 ஈழத் தமிழர்கள் கனடா புறப்பட்டுச் சென்றனர். அவர்களை அகதிகளாக பாவித்து உதவ கனடா அரசு முன் வந்துள்ளது. இதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சித்திராவ்கனி கனடா அரசிற்கு இது தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கப்பல் மூலம் கனடா வந்துள்ளவர்களில் பலர் விடுதலைப்புலிகள் ஆவர். இந்த கூட்டத்திற்கு தலைவராக உள்ள வினோத் விடுதலைப் புலிகளின் தலைவர் ஆவார். மேலும், அவருக்கு ஆயுதகடத்தலிலும் தொடர்பு உள்ளது.
எனவே, கனடா அரசு இங்கு வந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு அகதிகள் அந்தஸ்தை வழங்கக்கூடாது என்று அவர் அதில் கூறியுள்ளார்.
ஆனால் இலங்கை அரசின் இந்த குற்றச்சாட்டை ஏற்க கனடா அரசு மறுத்துவிட்டது. கப்பலில் வந்திருப்பவர்களைப் பார்த்தால் அப்பாவிகளாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் அகதிகள் தான் என்று கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications