ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்ட்-வெளியிட்டது டிவிஎஸ்

சமீபத்தில்தான் இந்த புதிய ரூபாய் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து ரூபாய் குறியீட்டுடன் கூடிய கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ள முதல் நிறுவனம் டிவிஎஸ்தான்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டிவிஎஸ் கோல்ட் பாரத் கீபோர்ட் (சுருக்கமாக டிவிஎஸ் - இ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கீபோர்டின் உதவி கொண்டு எளிதாக புதிய ரூபாய் குறியீடை எளிதாக இடம்பெறச் செய்யலாம்.
490மிமீ நீளம், 180மிமீ அகலம் மற்றும் 20மிமீ உயரம் கொண்ட இந்த புதிய கீபோர்டு, யுஎஸ்பி மற்றும் பிஎஸ்2 சப்போர்டை பெறும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்ரேடிங் சிஸ்டங்களில் இந்த புதிய கீபோர்டு தங்குதடையின்றி இயங்கும்.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட டிவிஎஸ் - இ கீபோர்டின் விலை ரூ. 1,495 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், புதிய ரூபாய் குறியீடு கொண்டுள்ள கீபோர்டை வடிவமைத்த முதல் மற்றும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கீபோர்டின் பிற சிறப்பம்சங்கள்:
- நீண்ட காலத்திற்கு உழைக்கும் வகையிலான பட்டன்கள். அதாவது 5 கோடி கீஸ்டிரோக்குகள் வரை தாக்குப் பிடிக்கக் கூடியவை.
- டிவிஎஸ் கோல்ட் பைலிங்குவல் கீபோர்டுகள் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், குஜராத்தி, அஸ்ஸாமிஸ், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளையும் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications