விழாவில் காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீர் மயக்கம்
திசையன்விளை: திசையன்விளை அருகே காலாவதி மிட்டாய் சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை அருகே உள்ள கனரசுத்து உவரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராமர் கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் தூதுவளை மிட்டாய் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட அங்கிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென்று கண் சொருகி நாக்கு வெளியே தள்ளிய நிலையில் கழுத்து மேல் நோக்கிச் சென்றது. இதனால் பயந்து போன தாய்மார்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு திசையன்விளையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
மயக்கமடைந்த குழந்தைகளுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஓரளவு குணமடைந்த குழந்தைகள் வீ்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீ்ண்டும் சில குழந்தைகளுக்கு இழுப்பு ஏற்படவே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு இதே போன்று திசையன்விளை அருகே உள்ள கரிசல் ஊரிலும், ஒரு வாரத்திற்கு முன்பு சொக்கலிங்கபுரத்திலும் கோவில் கொடை விழாவில் மிட்டாய் சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கத்துடன் இழுப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காலாவதியான மிட்டாய்களை சாப்பிட்டதால் இந்த இழுப்பு மயக்கம் வந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications