பொய் வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர்-எஸ்.ஐ.க்கு 3 நாள் போலீஸ் காவல்
கோவில்பட்டி: பொய் வழக்கு தொடர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை 3 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து கோவில்பட்டி கோர்ட் உத்தரவிட்டது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அனுமோகன். இவர் தனது நண்பர்களுடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி காரில் சென்றுள்ளார்.
அப்போது இவரை தென்காசி சோதனைச் சாவடியில் ராமநாதபுரம் போதை பொருள் தடு்ப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி, எஸ்.ஐ. ராஜமாணிக்கம், ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகியோர் பிடித்து ரூ.3 லட்சம் மாமூல் தருமாறு கேட்டனர். லஞ்சம் கொடுக்க மறுத்ததால் இவர் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அனுமோகன் முறையீட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அனுமோகன் மீது பொய் வழக்கு போட்டது நிரூபணமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு ஸ்டீபன் லூயிஸ் ஆகிய இருவரும் கடந்த 6-ம் தேதி இரவு தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவான எஸ்.ஐ. ராஜமணிக்கம் தேனி நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி சரணடைந்தார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி கோவில்பட்டி ஜே.எம். 1 கோர்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
இதை ஏற்று 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்ஸ்பெக்டர் காந்தி உள்ளிட்ட மூவரையும் விசாரணைக்காக நேற்று தூத்துக்குடி அழைத்து வந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications