என்னைத் தவிர யாரும் கூட்டணி குறித்து பேசக் கூடாது-தங்கபாலு
கோவை: கூட்டணி குறித்து நான் மட்டும்தான் பேச வேண்டும். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டென்ஷனாக கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
தலைவர் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பேசித் திரியும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். இங்குதான், மாநிலத் தலைவரின் பேச்சை அவரது ஆதரவாளர்களைத் தவிர வேறு யாரும் மதிக்க மாட்டார்கள்.
சமீப காலமாக தி்முகவை சரமாரியாக விமர்சித்துப் பேசி வருகிறார் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன். அவருக்கு ஒத்து ஊதுவது போல தானும் விமர்சித்துப் பேசி வருகிறார் கார்த்தி சிதம்பரம். இதனால் திமுக தரப்பு கடும் டென்ஷனாக உள்ளது.
இதனால் தங்கபாலுவுக்கு தர்மசங்கடமாகியுள்ளது. இந்த நிலையில் கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, தமிழக தலைமை மற்றும் திமுக தலைமை இடையே எவ்வித உரசலும் இல்லை. காங்கிரஸ்-திமுக உறவில் யாரும் குறுக்கே வர முடியாது.
அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் இதுவரை நான் விமர்சித்துப் பேசவில்லை. மற்றவர்கள் விமர்சித்துப் பேசுவது முறையல்ல. திமுகவை பற்றி தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சனம் செய்யக்கூடாது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். உள்கட்சியில் பேச வேண்டிய விஷயங்களை உள்கட்சியிலும், வெளியில் பேச வேண்டியதை மேடைகளிலும் பேச வேண்டும். இதையும் மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனவே, தேர்தல் கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. கட்சியை பலப்படுத்துவதை பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்க தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் கருத்து அதிகாரபூர்வமானது அல்ல.
அதிமுக, திமுக கட்சியின் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது இயல்பான விஷயம். அது பற்றி காங்கிரஸ் கட்சி கவலைப்பட வேண்டியது இல்லை. காங்கிரஸ் கட்சியில் புதிதாக 14 லட்சம் இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.
வரும் தேர்தலில் மகளிர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடும் காங்கிரஸ் கட்சியில் வழங்கப்படும். இளைஞர்களுக்கும் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும்.
மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். சென்னையில் டிசம்பர் மாதத்தில் சோனியா காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications