ஆசிரியை அடாவடி தாங்க முடியாமல் பள்ளிக்குப் பூட்டு போட்ட பொதுமக்கள்
ஓட்டபிடாரம்: ஓட்டபிடாரம் அருகே ஆசிரியையின் அடாவடியால் பொதுமக்கள் பள்ளியை இழுத்துப் பூட்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அருகே உள்ளது எம்.வெங்கடேஸ்வரபுரம். இங்கு யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் துணை தலைமை ஆசிரியை என இருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி தற்போது பிரச்சனையி்ல் சிக்கி உள்ளது.
இங்கு பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த துணை தலைமை ஆசிரியை சத்துணவு ஊழியர், சமையலர் உள்ளிட்ட சக ஊழியர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவாராம். அதனால் கல்வி தரம் அடியோடு பாதிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை பொதுமக்கள் அந்த பள்ளியை இழுத்துப் பூட்டினர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
புகாரில் சிக்கிய அந்த துணை தலைமை ஆசிரியை வயதில் முதிர்ந்தவராம். இதுவரை தலைமை ஆசிரியையாக பணியாற்றியவர்கள் அவரை விட வயது குறைந்தவர்களாம். இதனால் ஈகோ பிரச்சனை காரணமாக அவர்களை மதிக்காமல் அலட்சியப்படுத்துவாராம்.
அவரது தொல்லை தாங்காமல் இதுவரை 4 ஆசிரியர்கள் இடமாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது துணை தலைமை ஆசிரியையை அங்கிருந்து வெளியேற்றுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications