இந்தியாவின் பணக்காரக் கட்சி காங்கிரஸ்.. வருமானம் ரூ.1,518 கோடி!
டெல்லி: இந்தியாவில் உள்ள பணக்கார அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இக்கட்சிக்கு மட்டும் ரூ 612 கோடி சொத்துக்கள் உள்ளனவாம்.
ரூ 286 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளது.
டெல்லியில் செயல்பட்டு வரும் தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள சொத்து விபரங்களை கண்டறிந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள கட்சிகளில் அதிக சொத்துக்களுடன் நம்பர்- ஒன் பணக்கார கட்சியாக உள்ளது. அந்த கட்சிக்கு ரூ.612 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.
7 ஆண்டுகளுக்கு முன்பு 2002-2003ம் ஆண்டில் காங்கிரசின் மொத்த சொத்து மதிப்பு ரூ.53 கோடிதான். தற்போது அது ரூ.612 கோடியாக உயர்ந்து இருப்பதாக வருமான வரி கணக்கு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002-2003ல் காங்கிரசின் வருமானம் ரூ.70 கோடியாக இருந்தது. 7 ஆண்டுகளில் அது ரூ.1,518 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிக சொத்துள்ள கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு ரூ.286 கோடிக்கு சொத்துக்கள் உள்ளது. 2002ம் ஆண்டு அந்த கட்சிக்கு ரூ.11 கோடி அளவுக்குதான் சொத்துக்கள் இருந்தன.
ரூ.261 கோடி சொத்துக்களுடன் பாஜக மூன்றாவது இடத்தில் உள்ளது. என்றாலும் வருவாய் ஈட்டுவதில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக பாஜகதான் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் அதன் வருவாய் ரூ.754 கோடியாகும்.
முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.178 கோடி சொத்துக்கள் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications