மதுரையில் ஜெயலலிதா கூட்டம்-தயாராகும் அதிமுகவினர்

சில நாட்களுக்கு முன்பு கோவை மற்றும் திருச்சியில் அதிமுக சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மதுரையில் அதிமுக பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மதுரை தமுக்கம் மைதானத்தை, அக் கட்சி தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் தடையில்லா சான்றிதழ்களுடன், அ.தி.மு.க.நகர செயலாளர் செல்லூர் ராஜூ விண்ணப்பித்தார். ஆனால், சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த உள்ளதாகக் கூறி, மைதானத்தை தர மாநகராட்சி மறுத்து விட்டது.
இதனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமுக்கம் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனையடுத்து பொது கூட்டம் நடத்த நீதி மன்றம் அனுமதி வழங்கியது.
வருகிற செப்டம்பர் 18 ம் தேதி முதல் செப்டம்பர் 21 ம் தேதி வரை, மைதானத்தை அ.தி.மு.க.வினர் புக் செய்துள்ளனர். இதற்கான வாடகை தொகை 63 ஆயிரத்து 371 ரூபாயை அக்கட்சி செலுத்தி விட்டது.
அதேசமயம், மைதானத்தைப் பயன்படுத்த 19 நிபந்தனைகளை மாநகராட்சி விதித்துள்ளது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து பிரமாண்டமான அளவில் கூட்டத்தை நடத்தவும், அதற்கு ஜெயலலிதாவை வரவழைக்கவும் அதிமுகவினர் ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இருப்பினும் கோவை, திருச்சியில் கூட்டிய கூட்டத்தைப் போல தமுக்கம் மைதானத்தில் பெரும் கூட்டத்தைக் கூட்ட முடியாது என்பதால் வேறு இடத்தில் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டக் கூட்டத்தை நடத்துவது குறித்தும் அதிமுக தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications