ரேஷன் கார்டு கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருப்பூர்: திருப்பூரில் ரேஷன் கார்டு வழங்கக் கோரி பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த காலக்கெடுவுக்குள் புதிய ரேசன் கார்டு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகின்றது.
திருப்பூரில் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளதால், அவர்கள் இடம் பெயதல், மக்கள் தொகை, அடிக்கடி முகவரி மாறும் மக்கள், போதிய சான்று இல்லாதது, குடிமைப்பொருள் அலுவலகத்தில் போதிய அலுவலர்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால், புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தொடர் பிரச்னை ஏற்பட்டு வருகின்றது.
இப் பிரச்னை கருத்தில் கொண்டு, விண்ணப்பித்த 60 நாட் களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக, திருப்பூர் மாவட்டத்திலேயே ரேஷன் கார்டு அச்சிடும் மையம் துவக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள், திருப்பூர் குடிமைப்பொருள் அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி குவிந்தனர். அவர்கள் அதிகம் பேர் திரண்டதால், மிக நீண்ட வரிசையில் காத்திருந்த பொது மக்கள் ஆவேசம் அடைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் டி.ஆர்.ஓ.கஜலட்சுமி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications