For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் நிலவரம், கூட்டணி: வைகோ ஆலோசனை

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரங்கள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதில் மதிமுக மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்ற குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த இக் கூட்டத்தில் செப்டம்பர் 15ம் தேதி காஞ்சீபுரத்தில் நடைபெறும் திறந்தவெளி மாநாடு, சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காங்கிரசுடன் கூட்டணி அமைக்க அதிமுக முயற்சித்து வரும் நிலையில், அப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டால் மதிமுக என்ன நிலையை எடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இடம் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X