கபடி விளையாட்டில் தகராறு-கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை
நெல்லை: நெல்லை அருகே கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகேயுள்ள தாழையுத்து செல்வி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்ற மணி. இவரது மகன் இசக்கி செல்வம். கபடி வீரரான இவர் பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 15ம் தேதி இசக்கி செல்வம் தலைமையிலான ஒரு குழுவினரும், தாழையூத்து ராம்நகரை சேர்ந்த அர்ஜீனன் மகன் கிட்டான் தலைமையிலான மற்றொரு குழுவினரும் அருகன்குளம் பள்ளி வாளகத்தில் கபடி விளையாடினர். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் கிட்டன் கோஷ்டியினர் இசக்கி செல்வத்தை தீர்த்து கட்ட திட்டமி்ட்டனர். இந்நிலையில் நேற்றிரவு இசக்கி செல்வம் தனது நண்பர் ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் பரமன் ஆகியோருடன் தாழையூத்து சித்தி விநாயகர் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 14 பேர் கொண்ட கும்பல் இசக்கி செல்வத்தை சராமரியாக அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற ராமகிருஷ்ணன், பரமன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில் இசக்கி செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அந்த வழியாக வந்த தாழையூத்து ராம்நகர் லெட்சுமி, அவரது மகன் மகாராஜன் ஆகியோரை இசக்கி செல்வத்தின் ஆதரவாளர்கள் என நினைத்து வெட்டினர்.
தகவல் அறிந்ததும் டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
காயமடைந்த பரமன், ராமகிருஷ்ணன், லெட்சுமி ஆகியோர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து கிட்டன், பேச்சிகுட்டி, தங்கம், ஆர்தர், சி்ட்டிசன உள்பட 7 பேரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications