தகவல் ஆணையர் தேர்வு-நேருக்கு நேர் சந்திப்பார்களா கருணாநிதி, ஜெ.?
சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையர் தேர்வையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவியில் தற்போது இருந்து வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் பதவிக்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஆணையரைத் தேர்வு செய்ய வருகிற 23ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
புதிய தலைவரை தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், ஒரு அமைச்சர் ஆகியோர் கொண்ட குழுதான் கூடி தேர்வு செய்ய வேண்டும். கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய கூட்டத்தில் ஜெயலலிதா முதல்வராகவும், அன்பழகன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் கலந்து கொண்டனர்.
எனவே வருகிற 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியுடன், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஜெயலலிதாவும் கலந்து கொள்ள வேண்டும். எனவே அவர் கலந்து கொள்வாரா, இரு துருவங்களும் சந்திக்குமா, அந்த அதிசயம் நிகழ்ந்தேறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், கருணாநிதியும் சட்டசபை நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எங்குமே சந்தித்துக் கொண்டதில்லை - அரசியல்வாதிகளாக. எனவே வருகிற 23ம் தேதி இருவரும் சந்தித்துக் கொண்டால், அதுதான் அன்றைய தலைப்புச் செய்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications