பெண் ஊழியரின் தண்ணீர் பாட்டிலில் விந்தை கலந்தவர் கைது

இதுபோல இரண்டு முறை செய்துள்ளாராம் மைக்கேல் கெவின் லல்லனா என்ற அந்த 31 வயது நபர். புல்லர்டன் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல். இவர் மீது தற்போது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, பெண் மீதான வன் தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மைக்கேல் பின்னர் 500 டாலர் பணம் கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். செப்டம்பர் 14ம் தேதி அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.
இந்த கொடுமையான சம்பவம் கடந்த ஜனவரி 14ம் தேதி நடந்தது. நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் மார்ட்கேஜ் நிறுவனத்தில்தான் பணியாற்றி வருகிறார் மைக்கேல். அன்றைய தினம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியையின் டெஸ்க்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் தனது விந்துவைக் கலந்து விட்டார்.
இது தெரியாமல் அந்த ஊழியை, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார். அது ஒரு மாதிரியாக இருக்கவே உடனடியாக பாட்டிலை கீழே போட்டு விட்டார். இதுகுறித்து தனது நிறுவனத்தில் அவர் புகார் கொடுத்தார். நிறுவனம் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு விட்டு வேறு பாட்டிலை அவருக்குக் கொடுத்தது - நடந்தது தெரியாமல்.
இந்த நிலையில் 3 மாதம் கழித்து அந்தப் பெண்ணும், மைக்கேல் உள்ளிட்ட மேலும் 6 பேரும் ஆரஞ்ச் பகுதியில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அப்போது ஏப்ரல் 9ம்தேதி இதேபோல செய்துள்ளார் மைக்கேல். இந்த முறையும் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்துள்ளார் அந்தப் பெண். அப்போதும் தண்ணீர் ஒரு மாதிரியாக இருக்கவே சந்தேகமடைந்த அவர் தனியார் ஆய்வகத்தில் சோதனைக்காக அதைக் கொடுத்தார்.
பரிசோதனை செய்து பார்த்த தனியார் ஆய்வகம், அதில் விந்து கலந்திருப்பதாக பெண் ஊழியைக்குத் தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் அந்தப் பெண்.
இதையடுத்து போலீஸார் டிஎன்ஏ சோதனை நடத்தினர். அதில் சிக்கிக் கொண்டார் மைக்கேல். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெண் ஊழியையின் தண்ணீர் பாட்டிலில் விந்தைக் கலந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications