கோவில் விழாவில் போலீசாருக்கு அடி உதை-12 பேர் கைது
உவரி: கன்னியாகுமரி மாவட்டம் உவரி அருகே கோவில் கொடைவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
உவரி அருகே உள்ள குட்டம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 16ம் தேதி தொடங்கி நேற்று 18ம் தேதி வரை 3 நாட்கள் நடந்தது. நேற்று நிறைவு நாளை ஓட்டி இரவு பாட்டுக் கச்சேரி நடத்த அப்பகுதி இளைஞர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக சில நாட்களுக்கு முன்பு உவரி போலீசாரிடம் கச்சேரி நடந்த அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து பாட்டு கச்சேரிக்கு பதிலாக மிமிக்ரி நிகழ்ச்சி நடத்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதற்கு போலீஸ் அனுமதி கொடுத்தனர்.
அதன்படி நேற்று இரவு மிமிக்ரி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் இடையே அப்பகுதி இளைஞர்கள் சினிமா பாடல்களை போட்டு நடனமாடினர். இதனையறிந்த உவரி போலீசார் மோதல் சம்பவங்கள் நிகழாதவாறு தடுக்க நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு குடிபோதையில் நின்ற 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதபடை போலீ்ஸ்காரர் சுரேந்திரன் என்பவரிடம் நாங்கள் பாட்டு கச்சேரி நடத்த ஏன் நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்தனர்.
பின்னர் 12 பேரும் சுரேந்திரனை சரமாரியாகத் தாக்கினர். இதில் அவரது பற்கள் உடைந்தது. தொடர்ந்து தாக்கியதில் மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நாக மாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோரது தலைமையில் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்த சுரேந்திரனை மீட்டு ராதாபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.
தடியடியில் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓடினர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. அங்கிரு்ந்த சேர்கள் மற்றும் டியூப்லைட்டுகள், பல்வேறு பொருட்கள் சேதமாகின. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ்காரர் சுரேந்திரனை தாக்கிய 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தட்டத்தை சேர்ந்த சுரேஷ், சுயம்பு ஆனந்தன், சகாயதேவன் சுயம்புராஜன், தமிழ்செல்வன், முத்துகுமார், செல்லதுரை, புஷ்பராஜ், ஆனந்தராஜ், ஆனந்தன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீஸ்காரரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications