விருதுநகர் ஆர்.டி.ஓ.வைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) மீது நடவடிக்கை கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகாசி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி ஒரு பம்ப் செட்டு அறையில் சட்ட விரோதமாக பட்டாசு திரி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோட்டாட்சியர் கொம்பையன் தலைமையில் அங்கு சென்ற குழு, பட்டாசு திரிகளை வெளியே கொண்டு வந்து தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதில், ஏற்பட்ட திடீர் விபத்தில் சாத்தூர் காவல்துறை ஆய்வாளர் அப்துல் லத்தீப், விஏஓ குமாரசாமி, ஆர்.ஐ. ராஜ்மோகன் உள்பட உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை தனியார் மருத்து வமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி 8 பேரும் உயிரிழந்தனர்.
இதில், பலியானவர்களில் 4 பேர் வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 16 ம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விபத்து பற்றிய விசாரணையின் போது, ஆர்.டி.ஓ. கொம்பையன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர்,
விபத்தில், உயிரிழந்த வருவாய்த்துறை ஊழியர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ 20 லட்சம் வழங்க வேண்டும் என்றும், விபத்திற்கு காரணமான ஆர்.டி.ஓ. கொம்பையனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications