கலைஞர் காப்பீட்டு திட்டத்தால் குணமடைந்த காது கேளாத, முகத்தில் உணர்வில்லாதவர்
சென்னை: கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மேலும் ஒருவருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு காதின் நடுப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு சீழ் வடிந்து பெரும் அவதிக்குள்ளானார்.
இவருக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. இவரின் காது வலியும் அதிகரித்து மூளைக்காய்ச்சலும் சேர்ந்து கொள்ளவே அவருடைய முகத்தின் ஒரு பகுதி உணர்வின்றி போனது. காது கேட்கும் திறனையும் இழந்தது.
அப்போது தான் இவரின் இன்னல் தீர்க்க வந்தது கலைஞர் காப்பீட்டுத் திட்டம். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இவருக்கு நான்காவது முறையாக கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து அவர் காது கேட்கும் தன்மையை பாதியளவிற்கு மீண்டும் பெற்றார். அவர் முகத்தில் உணர்விழந்த பகுதிகளும் குணமடைந்தன.
அந்தோணிசாமியின் அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்று கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரம் வழங்கியது.
இவருக்கு காது முற்றிலுமாக கேட்க முடியாமல் இருந்தது போக தற்போது பாதியளவிற்காவது குணபடுத்தப்பட்டுள்ளது. அவர் மீண்டும் உயிர் பெற்று வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இது வரை 1,75,117 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், மூளை நரம்பு மண்டல பாதிப்புகள், எலும்பு முறிவு போன்ற பல்வேறு விதமான உயிருக்கு ஆபத்தான நோய் களில் இருந்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதற்காக இதுவரை தமிழக அரசு ரூ.468 கோடியே 71 லட்சத்து 36 ஆயிரம் செலவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications