புலிகள் காப்பகத்தில் மது அருந்துவது குற்றமா?-ரஷ்யர்கள் வாக்குவாதம்
விகேபுரம்: பாபநாசம் அருகே மது பாட்டில்களுடன் வந்த ரஷ்யர்களை வன ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது.
கூடன்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய ஊழியர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டு ஆண்-பெண்களும் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன் இங்கு பணிபுரியும் ரஷ்ய ஊழியர்கள் ஆண்-பெண் என 6 பேர் ஒரு காரில் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தனர்.
செக்போஸ்டில் அவர்களது காரை சோதனையிட்ட வன காப்பாளர் முருகேசன் 5 மதுபாட்டில்களை கைப்பற்றினார். இதையடுத்து வனத்துறையினரிடம் வாக்குவாதம் செய்த ரஷ்ய நாட்டினர் மது அருந்துவது கொலை குற்றமா என கேட்டனர்.
அதற்கு, வனக்காப்பாளர் இது புலிகள் காப்பக வனப்பகுதியாகும். மலை ப்பகுதிக்குள் மது பாட்டில்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. நீங்கள் கொண்டு வந்த மதுபாட்டில்களை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். திரும்பி வரும்போது அவற்றை வாங்கி செல்லுங்கள் என்றார்.
எனினும் சமாதானம் அடையாத அவர்கள் புலிகளுக்கும், மதுவுக்கும் என்ன சம்பந்தம் என திருப்பி கேட்டனர். பின்னர் ஒரு வழியாக சமாதானம் அடைந்த அவர்கள் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவிகளில் குளித்து விட்டு திரும்பி வரும்போது செஸ்போஸ்டில் கொடுத்த மதுபாட்டில்களை திரும்பி வாங்கி சென்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications