அமெரிக்கா... வேலை இழந்தோர் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்வு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தொட்டுள்ளது.
இதுகுறித்து அதிபர் ஒபாமா கூறுகையில், "அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் கொள்கைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .
வேலையிழந்தோரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 4.75 லட்சமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டது.
தற்போது இது 5 லட்சத்தை எட்டியுள்ளது கவலையளிக்கிறது. சிறிய தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதற்கான கொள்கைகளை அரசு வகுத்து வருகிறது", என்றார் அவர்.
ஏற்கெனவே இது தொடர்பான மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
ஆகஸ்ட் 14-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். முந்தைய வாரத்தில் இது 4.88 லட்சமாக இருந்தது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் தொழில்களுக்கு அதிக சலுகை அளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சி மிக மெதுவாக இருப்பதால் வேலையிழப்போரின் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
நவம்பர் மாதத்தில் இடைத் தேர்தலை ஜனநாயக கட்சி சந்திக்க உள்ள நிலையில் இப்போதைய வேலையிழப்பு அதிகரிப்பு கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையைப் போக்க நாடு முழுவதும் உள்ள சிறு தொழில் அதிபர்களை சந்தித்துப் பேச உள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications