விரைவில் ஈ-சேவையை அறிமுகப்படுத்தும் ஆர்.டி. ஓ. அலுவலகங்கள்: இனி கியூவில் நிற்க வேண்டாம்
சென்னை: லைசன்ஸ் வாங்க ஆர். டி. ஓ அலுவலகத்தில் கால் கடுக்க காத்திருந்த காலம் போய்விட்டது. போக்குவரத்துத் துறை ஈ-சேவையை அறுமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி அடைந்துவிட்டால் ஆன்லைனிலேயே லைசன்ஸ் வாங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.
மேலும், அதற்கான கட்டணத்தையும் நெட் பாங்கிங் மூலம் செலுத்தலாம். விண்ணப்பத்தை மட்டுமே இவ்வாறு வழங்க முடியும். லைசன்ஸைப் பெற ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குப் போய்த்தான் பெற முடியும்.
லைசன்ஸ் வாங்கத் தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் பயிற்சிப் பள்ளியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த சேவை போக்குவரத்துத் துறையின் ஈ-சேவை தளமான http://transport.tn.nic.in/transport/ என்ற முகவரியில் விரைவில் செயல்படத் தொடங்கும்.
ஒவ்வொரு பயிற்சிப் பள்ளிக்கும் ஒரு லாகின் ஐடி வழங்கப்படும். இதன் மூலம் ஈ-விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
இன்னும் சிறிது காலத்தில் லேனர்ஸ் லைசன்ஸ் (எல்எல்ஆர்) வழங்கும் முறைகளும் எளிதாக்கப்படும். அதற்கானத் தேர்வு ஜி.ஆர்.இ. மற்றும் டோபெல் தேர்வுகளைப் போன்று குறிப்பிட்ட மையங்களில் நடக்கும்.
இது குறித்து மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஈ-பேமன்ட் தளத்தை நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டர் (NIC) உருவாக்கியுள்ளது. இது செயல்படத் தொடங்கியதும், இன்டர்நெட் பாங்கிங் அக்கௌண்ட் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வரும் முன்பே தேவையான வழிமுறைகளை முடித்து விடலாம். லைசன்ஸோ, பதிவுச் சான்றிதழோ வழங்குவதற்கு முன் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
கடுமையான ஆள் வள குறைபாடு காரணமாகவே இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் நகரங்களில் உள்ள ஆர்.டி.ஓ. க்களுக்கு சிரமமாக உள்ளது. நகரங்களில் தினமும் சுமார் 1000 பேருக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.
ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஆட்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் குறைக்க விரைவில் ஈ-சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து கமிஷனர் எம். ராஜாராம் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications