சி.எஃப்.எல். பல்பு மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்குமா?

Subscribe to Oneindia Tamil

CFL Bulb
சென்னை: மின்சாரத்தைச் சேமிக்க சி.எஃப்.எல். பல்பை பரிந்துரைக்கின்றது அரசு. ஆனால், ஏழை, எளிய மக்களால் வாங்க முடியாத விலையில் விற்கப்படுகிறது சி.எஃப்.எல். பல்புகள். எனவே இதன் மீதான வாட் வரி விலக்கப்பட வேண்டும் என விளக்கு தயாரிப்பாளர்கள் கோரியுள்ளனர்.

சி.எஃப்.எல். மற்றும் எல்.இ.டி. விளக்குகள் மீதான மதிப்புக்கூட்டு வரியை 12.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைத்தால்தான் அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கிப் பயன்படுத்த முடியும் என்று மின் சாதன தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அரசு அலுவலகங்களில் குண்டு பல்புகளை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், மின் சேமிப்புத் திறன் கொண்ட சி.எஃப்.எல். பல்புகளைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஆனால், சி.எஃப்.எல். மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன. உதாரணமாக சி.எஃப்.எல். பல்புகள் ரூ.90-ல் இருந்து ரூ.1000 வரை விற்கப்படுகிறது.

இது குறித்து, மெட்ராஸ் எலக்ட்ரிக் டிரேட்ஸ் அசோசியேஷனின் (மெட்டா) பொதுச் செயலாளர் சன்சல்ராஜ் கிம்சூரா கூறியதாவது,

மின் சேமிப்புத் திறன் கொண்ட மின் விளக்குகளை தயாரிப்பதற்கான மதிப்புக் கூட்டு வரி (வாட்) 12.5 சதவிகிதமாக உள்ளது. இதை 4 சதவிகிதமாகக் குறைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறோம். வாட் வரி குறைந்து விட்டால், சி.எஃப்.எல். பல்பின் விலையும் ரூ.8 வரை குறையும். அப்போது, அனைத்து தரப்பினராலும் வாங்கிப் பயன்படுத்த முடியும்.

தற்போது ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் ஆகியவற்றில் சி.எஃப்.எல். பல்புகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, இந்த ரக மின் விளக்குகளின் பயன்பாடு 80 சதவிகிதமாக உள்ளது.

கேரளாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சி.எஃப்.எல். பல்புகள் குறைந்த விலையில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதே போன்று தமிழக அரசும் சி.எஃப்.எல். பல்புகளை குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வரும் காலத்தில் மின் சேமிப்புத் திறன் கொண்ட சி.எஃப்.எல். மற்றும் எல்.இ.டி. மின் விளக்குகளின் தேவை அதிகரிக்கும். குறைந்த தாழ்வழுத்த மின்சாரத்திலும் (170 வோல்டேஜ்) சி.எஃப்.எல். பல்புகள் சிறப்பாக எரியும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+