நான்தான் இன்னும் காமன்வெல்த் போட்டியின் பாஸ்-கல்மாடி

காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு மிகப் பெரிய அளவில் ஊழலில் இறங்கியுள்ளதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதைத் தொடர்ந்து தினசரி ஒரு ஊழலாக வெளியாகிய வண்ணம் உள்ளது. பணத்தை தேவையில்லாமல் அள்ளி இறைத்துள்ளனர். அனாவசியமாக செலவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து நாட்டின் பெயரை கல்மாடி அன்ட் கோ காலி செய்து விடும் என்ற அச்சத்தில், மத்திய அரசு இதில் தலையிட்டது. முதலில் தனியாக அமைச்சர்கள் குழுவை ஏற்படுத்தியது. இந்தக் குழுவின் அனுமதியில்லாமல் ஒருங்கிணைப்புக் குழு எதையும் செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் 11 அதிகாரிகளைக் கொண்ட உயர் மட்டக் குழுவும் அமைக்கப்பட்டு கல்மாடியின் அனைத்து அதிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்படியும் தனது 'தாடியில் மண் ஒட்டவில்லை' என்று கூறிக் கொண்டிருக்கிறார் கல்மாடி. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தான் இன்னும் காமன்வெல்த் போட்டியின் பாஸ். நான் பொறுப்பிலிருந்து விலகவில்லை. என்னை ஊழல் புகார்கள் எந்தவகையிலும் நெருக்கவில்லை.
மிகச் சிறந்த முறையில் இந்தப் போட்டியை நடத்த வேண்டிய சவால் எனக்கு உள்ளது. எனவே அதை சிறப்பாக முடிக்கும் வரை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.
எனது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எனது தலைமையில்தான் ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. தனது பொறுப்புகளை சரியான முறையில் செய்து வருகிறது என்றார் கல்மாடி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications