கொடநாடு எஸ்டேட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த அனுமதி கோரி வழக்கு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட்டுக்குள் சென்று ஆய்வு நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொடநாடு எஸ்ட்டேட்டுக்குள் தேயிலை ஆலை கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது விதிமுறையை மீறி, புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு இந்த எஸ்டேட்டுக்கு அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் உள்ளே நுழைய முடியாமல் திரும்பி விட்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் கட்டப்பட்டுள்ள தேயிலைத் தோட்டத்தை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications