நெல்லையில் இரவு பஸ் சேவை மேலும் விஸ்தரிப்பு-மக்கள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தனது இரவு நேரப் பேருந்து சேவையை விஸ்தரித்துள்ளது. கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதாக பொது மேலாளர் முருகன் தெரிவித்தார்.
இதன்படி, டவுன், சமாதானபுரத்திற்கும் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் சந்திப்பு-புதிய பேருந்து நிலையத்திற்கு மட்டும் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் காலை 6 மணி வரை இயக்கப்படுகிறது. ஆனால் சமாதானபுரம், டவுன் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரத்தில் பேருந்து வசதி இன்றி பயணிகள் சிரமப்பட்டனர். இதனால் மக்கள் ஆட்டோ அல்லது காரில் பயணித்தனர்.
இரவில் ஆட்டோ கட்டணத்தை கேட்டாலே மயக்கம் வந்துவிடும். அவர்கள் கேட்கும் கூடுதல் கட்டணத்தைக் கொடுத்து பயணித்தாலும் கூட, மக்கள் ஒருவித பயத்துடனேயே பயணம் செய்தனர்.
இந்த அவலத்தைப் போக்க இரவு நேரப் பேருந்துகளை அதிகரிக்கவும், விஸ்தரிக்கவும் வேண்டும் என்று நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்குக் கோரிக்கைகள் பறந்தன.
இதையடுத்து நெல்லை நகரப் பகுதிகளில் இரவு நேரப் பேருந்து சேவையை அதிகரிக்கவும், பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு, பாளை பஸ் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கும், டவுனில் இருந்து நெல்லை சந்திப்பு, சமாதானபுரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாளை பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கும் இரவு நேரப் பேருந்துகள் நேற்று இரவு முதல் இயக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications